செய்திகள் மலேசியா
ஷரியா கணக்கிற்கான விரைவான செயல்முறை அறிமுகப்படுத்தப்படுகிறது: ஊழியர் சேம நிதி வாரியம்
கோலாலம்பூர்:
ஷரியா கணக்கிற்கான விரைவான மற்றும் பயனர்களின் தேவைக்கேற்ப செயல்முறையை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று ஊழியர் சேம நிதி வாரியம் அறிவித்துள்ளது.
புதிய ஷரியா கணக்கு வைத்திருப்பவர்களும் மற்ற உறுப்பினர்களும் இந்த விரைவான செயல்முறையை பயன்படுத்தலாம்.
மேலும், புதிய பயனர்கள் தங்கள் விருப்பமான ஷரியா கணக்கு வகையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று ஊழியர் சேம நிதி வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த செயல்முறை பயனர்களின் ஆண்டுதோறும் மாதாந்திர காத்திருப்பு காலங்களைக் குறைக்கிறது என்றும் பயனர்களின் முதலீடுகள் ஷரியா கணக்கோடு இணக்கமாக இருப்பதை உறுதி செய்கிறது.
மேலும், இது பயனர்களின் நிதி மற்றும் ஷரியா-இணக்க சேமிப்பு விருப்ப விருப்பங்களுக்கு ஏற்ப அவர்களின் ஓய்வூதிய சேமிப்புகளை நிர்வகிப்பதை எளிதாக்குகிறது.
டிசம்பர் 25-ஆம் தேதிக்கு முன் ஷரியா கணக்கை பதிவு செய்த பயனர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி 2025 செயல்முறை அமலுக்கு வரும் என்று ஊழியர் சேம நிதி வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ந்து, டிசம்பர் 25-ஆம் தேதி 2024 முதல் மார்ச் 24-ஆம் தேதி 2025 வரை ஷரியா கணக்கை பதிவு செய்த பயனர்களுக்கு இந்த செயல்முறை ஏப்ரல் 1-ஆம் தேதி 2025 அமல்படுத்தப்படும்.
மார்ச் 25-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி 2025 வரை ஷரியா கணக்கை பதிவு செய்யும் பயனர்களுக்கு மே 1-ஆம் தேதி 2025 செயல்முறை அமல்படுத்தப்படும்.
மேலும், ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு இடையில் ஷரியா கணக்கை பதிவு செய்யும் பயனர்களுக்கு அடுத்த மாதத்தின் முதல் தேதி முதல் செயல்முறை அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கௌசல்யா ரவி
தொடர்புடைய செய்திகள்
April 8, 2026, 9:52 pm
டீசல் விலை லிட்டருக்கு 6.72 ரிங்கிட் என்ற புதிய உச்சத்தை எட்டியது
April 8, 2026, 6:06 pm
தேசிய பேரிடர் மேலாண்மை சபை நிறுவப்பட்டது
April 8, 2026, 6:00 pm
புற்றுநோய் தடுப்பில் அடுத்த கட்டம்: நோயாளிகளின் தரவுகளைத் திரட்டத் தெலுங்கானா அரசு முடிவு
April 8, 2026, 5:10 pm
சுங்கைப்பட்டாணியில் பரபரப்பு: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஷாபு போதைப்பொருள் பறிமுதல்
April 8, 2026, 4:55 pm
