செய்திகள் மலேசியா
இன வேறுபாடின்றி எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்ற 6,717 மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு வழங்கப்படும்: கல்வியமைச்சு
புத்ராஜெயா:
இன வேறுபாடின்றி எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்ற 6,717 மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு வழங்கப்படும்.
கல்வியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை உறுதிப்படுத்தியது.
2025ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் 10ஏ, அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற 6,717 மாணவர்கள் அனைவருக்கும் மெட்ரிகுலேஷன் இட வாய்ப்பு வழங்கப்பட்டது.
2025 எஸ்பிஎம் தேர்வில் 10ஏ, அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற 6,717 மாணவர்கள் அனைவருக்கும் 2026/2027 கல்வி அமர்விற்கான மெட்ரிகுலேஷன் திட்டத்தில் கல்வியமைச்சு வாய்ப்பளிக்கும்.
இனம் மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல், மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்தத் தானியங்கி வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், இத்திட்டத்திற்கான 90 சதவீத பூமிபுத்ரா சேர்க்கை ஒதுக்கீடு அப்படியே உள்ளது.
அது பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 8, 2026, 9:52 pm
டீசல் விலை லிட்டருக்கு 6.72 ரிங்கிட் என்ற புதிய உச்சத்தை எட்டியது
April 8, 2026, 6:06 pm
தேசிய பேரிடர் மேலாண்மை சபை நிறுவப்பட்டது
April 8, 2026, 6:00 pm
புற்றுநோய் தடுப்பில் அடுத்த கட்டம்: நோயாளிகளின் தரவுகளைத் திரட்டத் தெலுங்கானா அரசு முடிவு
April 8, 2026, 5:10 pm
சுங்கைப்பட்டாணியில் பரபரப்பு: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஷாபு போதைப்பொருள் பறிமுதல்
April 8, 2026, 4:55 pm
