நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டீசல் விலை லிட்டருக்கு 6.72 ரிங்கிட் என்ற புதிய உச்சத்தை எட்டியது

கோலாலம்பூர்:

உலகளாவிய எண்ணெய் விலையில் இன்று சரிவு ஏற்பட்டபோதிலும் தீபகற்ப மலேசியாவில் சில்லறை டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது.

இதன் அடிப்படையில் ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 15 வரையிலான காலகட்டத்தில் லிட்டருக்கு 6.72 ரிங்கிட் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் தற்போதைய தினசரி விலையை அடிப்படையாகக் கொள்ளாமல், முந்தைய வாரத்தின் சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதால், 70 சென் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதனால் கடந்த ஐந்து வாரங்களாக உலகளாவிய சந்தை உயர் மட்டத்தில் இருந்தபோது ஏற்பட்ட விநியோகச் செலவின் உயர்வையே தற்போதைய விலையும் பிரதிபலிக்கிறது.

பெட்ரோல் பொருட்களுக்கு ஒரு பேரலுக்கு சுமார் 150 அமெரிக்க டாலரும், டீசல் பொருட்களுக்கு ஒரு பேரலுக்கு 250 அமெரிக்க டாலரும் இந்த உயர் மட்டத்தில் இருந்தன.

இது நாட்டில் சில்லறை விலைகளைத் தொடர்ந்து பாதித்து வருகிறது என்று அமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset