நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் சொத்து விற்பனை அதிகரித்துள்ளது

கோலாலம்பூர்:

கொரோனா நெருக்கடி வேளையில் நாட்டில் சொத்து விற்பனை அதிகரித்துள்ளதாக மலேசிய ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு மேம்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டை விட கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சொத்து விற்பனை அதிகரித்துள்ளது என்றும், இந்நிலை நீடிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அச்சங்கத்தின் தலைவர் சோம் ஹெங்க் சூன் Soam Heng Choon தெரிவித்துள்ளார்.

பொருளாதார மீட்சிக்கான திட்டங்கள் இன்னும் பெரிய அளவில் விரிவாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இத்துறை வேகமாக முன்னேறும் என்றார் அவர்.

தீபகற்ப மலேசியாவில் 2,012 அடுக்குமாடி வீடுகளும், 601 ஒற்றை அடுக்கு மாடி வீடுகளும், 503 கோன்டோமினியம் வீடுகளும் விற்பனையாகி உள்ளன.

13 Types of Houses In Malaysia That You Should Know

பெரும்பாலான வீடுகள் ஷா ஆலம், கிள்ளான் பகுதிகளில் விற்பனையாகி உள்ளன.

இந்நிலையில், 15,076 வீடுகள் நடப்பாண்டின் பிற்பாதியில் விற்பனைக்கு தயாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மந்தை நோய் எதிர்ப்புசக்தி நிலையை எட்டி இருப்பதன் மூலம் நாட்டின் சொத்துச்சந்தை மீட்சி அடைவது வேகம் எடுக்கும் என மக்கள் எதிர்பார்ப்பதாக அண்மைய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

தீபகற்ப மலேசியாவில் உள்ள 180 பேர் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset