நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

GO DIGITAL PRODUCTION & MIRRAR INNOVATIONS TECHNOLOGIES இணைந்து வழங்கும் SIMPLISELL MALAYSIA அறிமுக விழா 

கோலாலம்பூர்: 

மின்னியல் வர்த்தகத்தில் ஈடுபட விரும்பும் நபர்களுக்கு நல்வாய்ப்பாக SIMPLISELL MALAYSIA என்னும் மின்னியல் வர்த்தக தளம் இன்று பூச்சோங்கில் சிறப்பான முறையில் அறிமுகம் கண்டது. 

இந்த முயற்சியின் வாயிலாக எந்தவொரு நபரும் தங்களின் பொருட்களை மின்னியல் முறையில் அதாவது E-COMMERCE என்னும் வழிகளில் பொருட்களை விற்கலாம். 

மின்னியல் வர்த்தகம் மட்டுமல்லாமல், நவீன தொழில்நுட்ப ரீதியிலும் பொருட்களை விற்கக்கூடிய வசதிகள் இருக்கிறது என்று GO DIGITAL PRODUCTIONS ஐ சேர்ந்த புவானா கூறினார். 

பொருட்களை விற்பது மட்டும் இல்லாமல் SERVICE PURPOSE அல்லது சேவைத்துறைகளிலும் கூடிய விரைவில் SIMPLESELL MALAYSIA மூலமாக தங்களின் சேவை வியாபாரத்தை அனைவரிடத்திலும் கொண்டு செல்ல இயலும். 

ஆரம்பத்தில் மித்ரா இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் நாங்கள் SIMPLISELL MALAYSIA திட்டத்தை உங்களுக்காக அறிமுகம் செய்தோம் என்று அவர் சொன்னார். 

XENDIT எனப்படும் உள்ளூர் நிதி இணைய பரிவர்த்தனை நிறுவனத்துடனும் நாங்கள் கூட்டு ஒத்துழைப்பு மேற்கொண்டுள்ளோம். மேலும், ஒரு பெண்மணியின் சொந்த தயாரிப்பிலான பொருட்களும் இன்றைய விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்று அவர் மகிழ்ச்சியுடன் சொன்னார். 

இந்த அறிமுக விழாவில் மித்ராவின் முன்னாள் தலைமை இயக்குநர் ரவிந்திரன் நாயர், GO DIGITAL PRODUCTIONS நிறுவனரும் இயக்குநருமான புவனா, பன்னீர் செல்வம் ஜெயராமன் ( DEPUTY DIRECTOR OF COORDINATION DEPARTMENT, APPGM-SDG), நந்தகோபாலன் ( CO-FOUNDER DIGITAL PRODUCTION), MirrAR Innovation Technologies Pvt Ltd  சேர்ந்த ஜே. பிரகாஷ், எம். முத்துராஜ், அனுஜா பிரகாஷ் மற்றும் வணிகர்கள், வர்த்தக பிரமுகர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

- மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset