
செய்திகள் வணிகம்
விலைவாசி உயர்வால் கேஎப்சி உணவகங்கள் மூடப்படுகின்றனவா? அமெரிக்க நிறுவனங்கள் என்று வியாபாரம் பாதிக்கப்பட்டதா?
கோலாலம்பூர்:
விலைவாசி உயர்வால் நாட்டில் அதிகமான கேஎப்சி துரிய உணவு உணவகங்கள் மூடப்பட்டன. இதனை கியூஎஸ்ஆர் பிரான்ட்ஸ் நிறுவனத்தின் உறுதி செய்துள்ளனர்.
நாட்டில் அதிகரித்து வரும் வணிகச் செலவுகளை நிர்வகிப்பதற்கு கிளைகளை தற்காலிகமாக மூடுவதன் மூலம் செயல்திறன் மிக்க நடவடிக்கையை நிறுவனம் எடுத்துள்ளது.
மேலும் மூடப்பட்ட கிளைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பரபரப்பான கிளைகளுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கியூஎஸ்ஆர் கூறியது.
வணிக வளாகங்களை மேம்படுத்துவதற்கான ஓர் அங்கமாகவும் இது உள்ளது.
அதே வேளையில் எத்தனை துரித உணவகங்கள் மூடப்பட்டன என்று கியூஎஸ்ஆர் கூறவில்லை.
முன்னதாக கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி வரை 108 உணவகங்கள் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக மலேசியர்கள் மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்சி உணவகங்களை புறக்கணித்துவருவதாகவும் கூறப்படுகிறது. அதனால் அந்த உணவகங்களுக்கு பெருமளவில் வியாபாரம் குறைந்து வருகிறது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் அமெரிக்க நிறுவனங்களின் வியாபாரங்கள் முஸ்லிம் நாடுகளில் பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm