நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா - மலேசியா இடையே பயங்கரவாத தடுப்பு ஒத்துழைப்பு

புது டெல்லி:

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கான ஒத்து ழைப்பை மேம்படுத்த இந்தியா- மலேசியா கூட்டாக அறிவித்துள்ளன.

தில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந் தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலும் மலேசியா சார்பில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை இயக்குநர் நுஷிர்வான் பின் ஜைனல் ஆபிதீன் தலைமையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் சர்வ தேச, பிராந்திய மற்றும் கடற்சார் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப் பட்டது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'இந்தியா-மலேசியா இடையே நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான முதலாவது பேச்சுவார்ததையில் இணைய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset