
செய்திகள் இந்தியா
திபெத் நிலநடுக்கம்: 130 உயிரிழப்புகள், 230க்கும் மேற்பட்டோர் காயம்
புதுடெல்லி:
திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் டெல்லி, பிஹார் மாநிலங்களிலும் உணரப்பட்டது.
சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லைப் பகுதியையொட்டி நேற்று காலை 6.35 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது.
இதனால் திபெத், நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின. இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் திபெத்தின் ஜிசாங்க் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதால் அப்பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இங்கு வசிக்கும் மக்கள் கடும் பீதி அடைந்தனர். கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக திபெத்தின் ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இடிந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என தகவல் வெளியானது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பாதிப்பு அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக திபெத்தில் 1,000-க்கும் அதிகமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டன.
பிஹார், டெல்லியில் நிலஅதிர்வு: பிஹார், டெல்லி, அசாம், மேற்கு வங்கம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்தியா மட்டுமல்லாமல் நேபாளம், பூடான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இப்பகுதியில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்த மின்விசிறி, விளக்குகள் நிலநடுக்க பாதிப்பால் லேசாக அசைந்தன.
2015-ல் நேபாளத்தில்.. திபெத் நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டது. ஆனால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடைசியாக நேபாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.8 என பதிவானது. அந்த நிலநடுக்கத்தால் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm
விமானக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்துவதை தடுக்க நடவடிக்கை
July 9, 2025, 9:42 pm