நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தீ விபத்து: பள்ளியின் ஒரு பகுதி 70% தீயில் அழிந்தது

ஆயர் தாவார்: 

ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் அப்பள்ளியின் ஒரு பகுதி 70% தீயில் அழிந்தது.

பேரா மாநில தீயணைப்பு, மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மத் இதனை உறுதிப்படுத்தினார்.

சித்தியவான் அருகே உள்ள ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நேற்றி தீ விபத்து நிகழ்ந்தது.

இந்த தீ விபத்தில் பள்ளியின் மூன்று வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், ஸ்டோர் ரூம், சிற்றுண்டி சாலையில் சேதமடைந்தன.

இப்பகுதிகள் கிட்டத்தட்ட சுமார் 70% தீயில் அழிந்தன.

இத்தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தீயை அணைப்பதுடன் தீ பள்ளியின் மற்ற பகுதிக்கு பரவாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

சில மணி நேரங்களை தீயை முழுமையாக அனைத்தனர்.

சம்பவத்தின் போது சில ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமே பள்ளியில் இருந்தனர்.

அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset