நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பிற்கான கூடுதல் உத்தரவு மறைக்கப்பட்டது தொடர்பில் முழு விசாரணை நடத்த வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

நஜிப் வீட்டுக் காவலுக்கான கூடுதல் உத்தரவு மறைக்கப்பட்டது தொடர்பில் முழு விசாரணை நடத்தப்பட  வேண்டும்.

பெர்சத்து சயாப் பிரிவின் சிரம்பான் தொகுதி தலைவர் டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

எஸ்ஆர்சி வழங்கில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை நாட்டின் 16ஆவது மாமன்னர் பாதியாக குறைத்தார்.

அதே வேளையில் எஞ்சிய தண்டனையை வீட்டில் கழிப்பதற்கான கூடுதல் உத்தரவையும் மாமன்னர் வழங்கியுள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதியிட்ட அக்கூடுதல் உத்தரவுக்காக கடிதம் இருந்ததை பகாங் அரண்மனை உறுதிப்படுத்தியது.

ஆனால் இக்கூடுதல் உத்தரவுக்கான கடிதம் மறைக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான ஆவணத்தை மறைப்பது வெளிப்படைத் தன்மையை மீறுவதாகும்.

மேலும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் நேர்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதே நேரத்தில் அரசு நிறுவனங்கள், மலாய் ஆட்சியாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கையையும் சிதைக்கிறது.

ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என டத்தோ சரவணக்குமார் கேட்டு கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset