நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னருக்கு எதிரான அவதூறு பதிவு: கடை நடத்துநருக்கு மூவாயிரம் ரிங்கிட் அபராதம் 

கோலாலம்பூர்: 

எக்ஸ் தள பக்கத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு எதிரான அவதூறு பதிவு செய்த கடை நடத்துநருக்கு இங்குள்ள ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றம் மூவாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது 

குற்றஞ்சாட்டப்பட்ட 56 வயதான சைடி மாட் ஷா தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு நீதிபதி ஹசீலியா முஹம்மத் இந்த அபராதத்தை விதித்தார் 

அபராதத் தொகை செலுத்தவில்லை என்றால் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார். 

1948ஆம் ஆண்டு நிந்தனை சட்டத்தின் கீழ் அவர் குற்றஞ்ச்சாட்டப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை மாநில வழக்கறிஞர் இயக்குநர் அப்துல் கஃபார் வழிநடத்தினார். குற்றவாளி சார்பாக எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset