நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்பிஎம் மலாய்மொழி தேர்வை எழுத வராத 10,000 மாணவர்கள் தொடர்பான தரவுகளை தவறாக கையாள வேண்டாம்: என்யூடிபி

கோலாலம்பூர்:

எஸ்பிஎம் மலாய்மொழி தேர்வை எழுத வராத 10,000 மாணவர்கள் தொடர்பான  தரவுகளை தவறாக கையாள வேண்டாம்.

என்யூடிபி எனப்படும் தீபகற்ப மலேசியா தேசிய ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் பௌசி சைகோன் இதனை கூறினார்.

2024ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இதன் மலாய் மொழி தேர்வை எழுத கிட்டத்தட்ட 10 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை.

இந்த  10,000 மாணவர்கள் தொடர்பான தரவுகளைக் கையாள வேண்டாம்.

குறிப்பாக அது தொடர்பில் பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம்.

வராத மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஒப்புக்கொண்டார்.

ஆனால் இந்த பிரச்சினையில் சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு கல்வி கற்பித்த மாணவர்கள் , அவர்களின் சொந்த பெற்றோர்களிடையே விழிப்புணர்வை உள்ளடக்கியது.

இந்த பிள்ளைகளின் இந்த குறைபாட்டிற்கு பெற்றோர்களே காரணம் என்பதால் பெற்றோரின் பங்கும், குடும்பக் கல்வியும் மிகவும் அவசியம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset