நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்ஆர்டி இலகு இரயில் நிலையக் கட்டுமானப் பணிக்காக ‘பெஸ்டா புலாவ் பினாங்’ இடம் மாற்றம் செய்யப்படுகிறது: சாவ் கோன் இயோ

ஜோர்ஜ் டாவுன்:

எல்ஆர்டி இலகு இரயில் நிலையக் கட்டுமானப் பணிக்காக 60 ஆண்டுகளாக சுங்கை நிபோங்கில் நடைப்பெற்று வரும்  ‘பெஸ்டா புலாவ் பினாங்’ வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது என்று பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோ கூறினார்.

மேலும், ‘பெஸ்டா புலாவ் பினாங்’ 1966-ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் உள்ளது. 

இது பினாங்கின் கலாச்சாரம்,ஒற்றுமை போன்ற உணர்வினை உள்ளடக்கியுள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

44 நாட்களுக்கு நடைப்பெறும் ‘பெஸ்டா புலாவ் பினாங்’ நிகழ்ச்சியை ஆளுநர் அஹமத் ஃபுசி அப்துல் ரசாக் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த நிலையில் துணை முதலமைச்சர் டத்தோ டாக்டர் முஹம்மத் அப்துல் ஹமிட், மாநிலச் செயலாளர் டத்தோ சுல்கிஃப்லி லோங் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.  

தொடர்ந்து, இடம் மாற்றப்பட்டாலும் இந்த நிகழ்ச்சியின் சாரமும் வரலாற்றுப் பதிவும் மாறாது என சாவ் கோன் இயோ  வலியுறுத்தினார்.

‘பெஸ்டா புலாவ் பினாங்’ நிகழ்ச்சிக்காக பினாங்கு மாநில அரசு 4.5 மில்லியன் ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- கௌசல்யா ரவி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset