நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வருமான வரி வாரியத்தின் புதிய தளம்: பணியாளர்கள் ஜனவரி 15-க்குள் PCB சமர்ப்பிக்க வேண்டும்

கோலாலம்பூர்:

தற்போதைய,  முந்தைய வரி காலங்களுக்கான மாத வரி கழிவு (PCB) தரவு,  பணங்களை ஜனவரி 15-க்குள் சமர்ப்பிக்குமாறு பணியாளர்களை மலேசிய வருமான வரி வாரியம் (LHDN) நினைவூட்டியுள்ளது.

    இந்த தேதி, MyTax தளத்தில் ( My Tax Portal)  கீழ் உள்ள e-PCB, e-Data PCB, e-CP39 தளங்களை மாற்றி புதிய e-PCB Plus தளத்திற்கு மாற்றும் காலக்கட்டமாகும் என்பதையும் அது சுட்டிக் காட்டியுள்ளது.

“ஜனவரி 15, 2025 முதல், தற்போதைய PCB தளங்கள் படிக்க மட்டும் பயன்படுத்தப்படும்; அவற்றின் கணக்கீடு, தரவு உள்ளீடு, பணம் செலுத்தும் செயல்பாடுகள் நிரந்தரமாக முடக்கப்படும்,” என்று LHDN தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 15-க்குள் சமர்ப்பிக்காவிட்டால் நிர்வாகத் தாமதங்கள் அல்லது அபராதங்கள் ஏற்படலாம், என LHDN எச்சரித்துள்ளது.

புதிய e-PCB Plus தளத்தில் பங்கு பெறாத பணியாளர்கள், மாற்றத்தை எளிதாக்க மற்றும் இடையூறுகளைத் தவிர்க்க உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும்.

இந்த மாற்றம் செப்டம்பர் 24, 2024 அன்று தொடங்கப்பட்டது; பணியாளர்கள் MyTax மற்றும் e-PCB Plus மூலம் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகளைப் பதிவு செய்யலாம்.

e-PCB Plus தளத்தின் முழு அறிமுகம் விரைவில் அறிவிக்கப்படும் என்பதையும் மலேசிய வரிமான வரி வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset