நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹன்னா இயோவுக்கு எதிராக 182 போலிஸ் புகார்கள்: 59 நபர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர்:

இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோவுக்கு எதிராக 189 போலிஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

கோலாலம்பூர் போலிஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா இதனை கூறினார்.

ஹன்னா இயோ எழுதிய புத்தகம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து, அச்சுறுத்தல் என வர்ணிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 182 போலிஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

அதே வேளையில் இதன் விசாரணைக்காக 59 நபர்களின் வாக்குமூலத்தையும் போலிசார் பதிவு செய்துள்ளனர்.

அமைச்சர் ஹன்னா இயோவின் வாக்குமூலம் இன்னும்  பதிவு செய்யப்படவில்லை.

அந்தச் செயல்முறை விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset