செய்திகள் மலேசியா
பான் தீவு இணைப்பு (PIL 1) நெடுஞ்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும்: பினாங்கு அரசு நம்பிக்கை
ஜார்ஜ் டவுன்:
சர்ச்சைக்குரிய பான் தீவு இணைப்பு (PIL 1) நெடுஞ்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோ தெரிவித்தார்.
12-ஆவது மலேசியத் திட்டத்தின் (12MP) கீழ் முன்மொழியப்பட்ட பான் தீவு இணைப்பு 1 (PIL 1)- க்கான நிதியுதவி குறித்து மத்திய அரசு மறுஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.
மாநில அரசு சமர்ப்பித்த 10 அரசு திட்டங்களில் எட்டு திட்டங்கள் தற்போது பொருளாதார அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளதாக சாவ் கோன் இயோ கூறினார்.
அந்த எட்டு திட்டங்களில் PIL 1 திட்டமும் அடங்கும்.
இந்த ஆறு வழி PIL 1 திட்டமானது பினாங்கு மலைத்தொடர் வழியாக 7.6 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட சாலைகள், 10.1 கிலோ மீட்டர் சாலைகளில் சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
இந்தச் சுரங்கப்பாதை பிரிவு பினாங்கு மலை, பயா டெருபாங், சுங்கை ஆரா, பினாங்கு மலை ஃபனிகுலர் ரயில்வே ,சிட்டி பார்க் போன்ற முக்கிய பகுதிகளுக்கு கீழ்த் தளத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் 2019-ஆம் ஆண்டில் PIL 1 திட்டத்திற்கு 7.5 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தீவின் முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பைச் சேதப்படுத்தியதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டது.
இது சுற்றுச்சூழல் ஒப்புதலைப் பெற்ற போதிலும், நிதி சிக்கல்கள் காரணமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.
சாலை கட்டுமானம், கடலோர அரிப்பு தடுப்பு கட்டமைப்புகள், சுகாதார மருத்துவமனை மேம்பாடு, பிற அத்தியாவசிய முயற்சிகள் உள்ளிட்ட பினாங்கின் முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் என்று நம்புவதாக சாவ் குறிப்பிட்டார்.
- நந்தினி ரவி
தொடர்புடைய செய்திகள்
January 8, 2025, 9:39 pm
எது உண்மை எது பொய் என்று என்னால் சொல்ல முடியும்: நஜிப்
January 8, 2025, 6:08 pm
இந்தியா-மலேசியா உறவு மேலும் வலுவடையும்: கோபிந்த் சிங் டியோ
January 8, 2025, 6:08 pm
காணாமல் போன இளைஞர் மலாக்கா மாநிலத்தில் பத்திரமாக கண்டெடுக்கப்பட்டார்
January 8, 2025, 5:46 pm
மெட்டா கூடிய விரைவில் செயலாக்க உரிமத்தை பெறவிருக்கிறது: தகவல், தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி அறிவிப்பு
January 8, 2025, 5:46 pm
கூடுதல் உத்தரவை அரசாங்கம் மறைக்கவில்லை: ஃபஹ்மி
January 8, 2025, 4:57 pm
உணவகத்தில் நண்பர்களுடன் உணவருந்தி கொண்டிருந்த ஆடவன் சுட்டுக்கொல்லப்பட்டான்: ஜொகூர் பாருவில் பரபரப்பு
January 8, 2025, 4:53 pm
இந்திய ஆடவர் எஸ்.எஸ். பாலமுருகனைக் காணவில்லை: பொதுமக்களின் உதவியை நாடுகிறது போலிஸ்
January 8, 2025, 4:48 pm
சமூக ஊடகத்தில் அவதூறு பதிவு: இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ போலிசில் புகார்
January 8, 2025, 4:26 pm