நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பிற்கு வழங்கப்பட்ட கூடுதல் உத்தரவினால் பிரதமர் அன்வார் இப்ராஹிமால் என்ன செய்ய முடியும் ? 

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் தனது எஞ்சிய சிறை தண்டனையை வீட்டுக்காவலில் கழிக்க வகை செய்யும் கூடுதல் உத்தரவு தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது 

2-1 என்ற பெரும்பாண்மையுடன் நஜிப் ரசாக் தனது கூடுதல் உத்தரவு தொடர்பான வழக்கு விசாரணையில் வெற்றிக் கண்டார். 

இதனால் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் கூடுதல் உத்தரவு தொடர்பான சீராய்வு மனு மீண்டும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது 

ஆக, நஜிப்பின் கூடுதல் உத்தரவுக்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று கேள்வி எழுப்பப்படுகிறது 

பிரதமர் என்ற முறையில் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது பணிகளைச் செவ்வனே ஆற்றி வருகிறார். இந்த கூடுதல் உத்தரவு விவகாரத்தில் அரச மன்னிப்பு வாரியம், 16ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவு ஆகியவை உட்படுத்தியதாகும். 

நஜிப்பின் வழக்கு விசாரணையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது நாட்டில் நீதித்துறை சுயேட்சையாக செயல்படுவதைக் காட்டுவதாக உள்ளது என்று எம்.பி. ஹசான் காரிம் கூறினார். 

இந்த விவகாரங்களில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. நஜிப்பின் கூடுதல் உத்தரவு என்பது மன்னிப்பு வாரியத்தையும் AGC தரப்பையும் உட்படுத்தியதாகும்

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset