நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வாரின் அறிக்கையின் அடிப்படையில் தம்மீதான 1 எம்டிபி மோசடி குற்றச்சாட்டுகளை மறுஆய்வு செய்ய வேன்டும்: நஜிப்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் அறிக்கையின் அடிப்படையில் தம்மீதான 1 எம்டிபி மோசடி குற்றச்சாட்டுகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இதனை வலியுறுத்தினார்.

கடந்த மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில்,

நான் எதிர்கொள்ளும் 2.3 பில்லியன் ரிங்கிட் 1 எம்டிபி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.

தேசிய சட்டத் துறை அலுவலகம் என்னையும் என் குடும்பத்தையும் பாதித்த குற்றச்சாட்டுகள் பற்றிய விரிவான மறுஆய்வை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது என்று நஜிப் வலியுறுத்தினார். 

குறைபாடுள்ள குற்றச்சாட்டுகள் மூலம் அவசர அவசரமாக இந்த வழக்குத் தொடரப்பட்டது என்ற நிலைப்பாட்டில் நான் ஆறு ஆண்டுகளாக உறுதியாக உள்ளேன்.

அது பிரதமரின் அறிக்கையில் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என   அவர் தனது தரப்பு சாட்சியத்தில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset