நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜார்ஜ்டவுன் பாசார் போரோங்கில் அதிரடி சோதனை: 28 அந்நிய நாட்டினர் கைது

ஜார்ஜ்டவுன்:

ஜார்ஜ்டவுன் பாசார் போரோங்கில் அதிரடி சோதனை நடவடிக்கையில் 28 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்னர்.

பினாங்கு மாநகர் மன்றம் இதனை ஓர் அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியது.

இங்குள்ள காட் லெபோ மகாலுமில் உள்ள மொத்த விற்பனைச் சந்தை இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பினாங்கு மாநகர் மன்றம், பினாங்கு குடிநுழைவு இலாகா அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுக்கப்பட்டனர்.

அதிகாலை 3 மணிக்குத் தொடங்கிய இரண்டு மணி நேர நடவடிக்கையின் போது மொத்த சந்தையில் பணிபுரியும் 57 வெளிநாட்டினர் சோதனை செய்யப்பட்டனர்.

இதில்  பல்வேறு குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படுவதால் அங்கு வேலை செய்த 28 வெளிநாட்டினரை அதிகாரிகள்    கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் ஆறு அபராத அறிக்கைகளும்  வெளியிடப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset