நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லாயாங் லாயாங் ரிசார்ட்டுக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படுகிறது: ரோஸ்லான் அப்துல் ரஹ்மான்

புத்ரா ஜெயா: 

ஜனவரி 6-ஆம் தேதி முதல் லயாங்-லாயாங் ரிசார்ட்டுக்கு வழங்கப்பட்ட உரிமத்தைச் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் ரத்து செய்துள்ளது என்று சுற்றுலா ஆணையர் டத்தோ ரோஸ்லான் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். 

சுற்றுலாத் தொழில் சட்டம் 1992 [சட்டம் 482] இன் பிரிவு 8-ன்படி இந்த உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதைச் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாக சுற்றுலாத் துறை ஆணையர் டத்தோ ரோஸ்லான் அப்துல் ரஹ்மான் 
தெரிவித்தார்.

மலேசியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக உரிமம் பெற்ற நடத்துனர்கள் சட்டத்தை மீறுவதை அமைச்சகம் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்று அவர் கூறினார்.

கடந்த  2020 ஆம் ஆண்டு சபாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ஸ்கூபா டைவிங் விளையாட்டுக்கு முன்பதிவு செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வைப்புத்தொகையைத் திருப்பித் தரத் தவறியதாகக் கூறப்படுகிறது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset