நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பிற்கான கூடுதல் உத்தரவு விவகாரத்தில் அம்னோவில் நிலைப்பாடு என்ன?:  தெங்கு ரசாலி கேள்வி

கோலாலம்பூர்:

நஜிப்பின் வீட்டுக் காவலுக்கான கூடுதல் உத்தரவு விவகாரத்தில் அம்னோவில் நிலைப்பாடு என்னவென்று அதன் மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா கேள்வி எழுப்பினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து  அவர் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் நஜிப்பை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது தொடர்பான கூடுதல் உத்தரவை பகாங் அரண்மனை உறுதிப்படுத்தியது  அவரது கவலைகளில் ஒன்றாகும்.

பகாங் அரண்மனையின் கடிதம், நஜிப் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் ஒரு கூடுதல் உத்தரவு  இருப்பதை உறுதி செய்துள்ளது.

இந்த கூடுதல் உத்தரவு இருப்பதைப் பற்றிய தகவல் அரசாங்கத்திடம் எவ்வாறு இல்லை என்பது தான் தற்போதைய அனைவரின் கேள்வியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருக்கும் அம்னோவின் நிலைபாடு என்னவென்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதே வேளையில் இவ்விவகாரத்தில் அம்னோவில் அடுத்த நடவடிக்கை என்னவென்று கேள்விகள் எழுந்துள்ளது என்று தெங்கு ரசாலி கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset