நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயல்திட்டங்களைச் செயல்படுத்த பிரதமருக்கு முழு ஐந்தாண்டு பதவிக் காலத்தை அனுமதிக்க வேண்டும்: தியோங் கிங் சிங்

பெட்டாலிங் ஜெயா: 

மக்கள் நலனுக்காக அரசு முன்முயற்சிகளைச் செயல்படுத்த முழு ஐந்தாண்டு பதவிக் காலத்தைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங் தெரிவித்தார். 

ஜனநாயக செயல்முறைக்கு வெளியே அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற சிலரின் பேச்சு தேசிய ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கும் என்று அவர் கூறினார்.

தலைமை மாற்றம் தேவை என்ற பேச்சு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைத் தாமதப்படுத்துகிறது. 

இது தேசிய பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் கூடுதல் உத்தரவின் பேரில் அன்வாரை ராஜினாமா செய்யுமாறு பாஸ் கட்சிடின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி நேற்று கோரினார்.

கூடுதல் ஆணையை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை நிர்பந்திக்க, நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க, மேல்முறையீட்டு நீதிமன்றம் நஜிப்பிற்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset