நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு டத்தாரான் பெர்டானாவில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது

புத்ரா ஜெயா: 

மலேசியாவிற்கு இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் அவரது துணைவியார் Loo Tze Lui ஆகியோருக்கு இன்று டத்தாரான் பெர்டானாவில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமராகப் பதவியேற்று லாரன்ஸ் வோங் மலேசியா வருவது இது இரண்டாவது முறையாகும்.

இன்று காலை 10 மணிக்கு டத்தாரான் பெர்டானாவில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவரை வரவேற்றார்.

பின்னர் இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

இன்று நடைபெறும் 11-ஆவது மலேசியா-சிங்கப்பூர் தலைவர்களின் சந்திப்பில் லாரன்ஸ் வோங் கலந்து கொள்வார். 

வரவேற்பு விழாவுக்குப் பிறகு, அவர் அன்வாருடன் தலைவர்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொள்வார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset