நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியர்களுக்கு சிறந்த ஓய்வூதிய எதிர்காலத்தை உருவாக்குவதில் ஈபிஎப் முனைப்பு காட்ட வேண்டும்: பிரதமர்

கோலாலம்பூர்:

மலேசியர்களுக்கு சிறந்த ஓய்வூதிய எதிர்காலத்தை உருவாக்குவதில் ஈபிஎப் எனப்படும் சேமநிதி வாரியம் முனைப்பு காட்ட வேண்டும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ஈபிஎப் தலைவர் டான்ஸ்ரீ முஹம்மத் ஜூக்கி அலி தலையிலான ஈபிஎப்  பிரதிநிதிகளுடன் சிறப்பு சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

மலேசியர்களுக்கு சிறந்த ஓய்வூதிய எதிர்காலத்தை உருவாக்க உதவுவதில்   ஜிஎல்ஐசி நிறுவனமான ஈபிஎப்பின் பங்கு குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் சேமிப்பைப் பாதுகாப்பதில் ஈபிஎப் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

ஓய்வூதியம் பெறுவோர் எதிர்காலத்தில் வசதியான ஓய்வூதியத்தை நிம்மதியுடன் அனுபவிக்க போதுமான சேமிப்பை வைத்திருப்பதை ஈபிஎப் உறுதி செய்ய வேண்டும் என தாம் அக் குழுவினரிடம் வலியுறுத்தியதாக பிரதமர் முகநூலில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset