நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு எம்ஏசிசி முன்னுரிமை: அசாம் பாக்கி 

கோலாலம்பூர்:

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்வ் எம்ஏசிசி முன்னுரிமை அளிப்பதாக அதன் தலைமை ஆணையர் தான்ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார். 

மேலும், எம்ஏசிசி அதன் பணியாளர்களின் கல்வி, அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் நேற்று ஒரு அறிக்கையில், அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கி, 

நாட்டின் கோரிக்கைகள், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதை அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார். 

அரசாங்கத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க, குறிப்பாக இலக்கவியல் 
மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய இரு துறைகளில், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள அதன் அதிகாரிகளின் தயார்நிலையை உறுதி செய்வதில் எம்ஏசிசி கவனம் செலுத்தும்.

எம்ஏசிசி அதிகாரிகள், ஊழல் பிரச்சினைகளைத் திறம்பட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முனைப்புடன் இருக்க வேண்டும். 

இந்தச் செயலுக்கமான அணுகுமுறை தடுப்பு நடவடிக்கைகளால் பின்பற்றப்பட வேண்டும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset