நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநிலம் 5 பில்லியன் மதிப்பிலான முதலீட்டைப் பெற்றது: அபு ரவூப் யூசோ

அலோர் காஜா: 

கடந்த செப்டம்பர் மாதம் வரை 5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீடுகளை மலாக்கா மாநிலம் பெற்றுள்ளது என்று அம்மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அபு ரவூப் யூசோ தெரிவித்தார்.

அந்தத் தொகையில், 0.8 பில்லியன் ரிங்கிட் வெளிநாட்டு முதலீடுகளும், 4.2 பில்லியன் ரிங்கிட் உள்ளூர் முதலீடுகளும் அடங்கியுள்ளன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநிலத்தின் வளர்ச்சி, பொருளாதாரத் திறனை நம்பிக்கையுடன் பார்க்கின்றனர் என்பதை இது காட்டுகிறது என அவர் மேலும் கூறினார்.

மேலும், இது மலாக்கா மாநில முன்னேற்றத்தை மேம்படுத்துவதில் பங்குதாரர்கள் தொடர்ந்து கடினமாக உழைத்து, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு ஊக்கமாக இருக்கும் என்று அவர் மலாக்கா கார்ப்பரேஷன் (MCORP) குழுமத்தின் கலைநிகழ்ச்சியின் பேசிய போது தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் டத்தோக் அஸார் அர்ஷாத்,  மாநில முதலீடு, தொழில் - தொழில்நுட்ப கல்வி மேம்பாட்டு குழு தலைவர் டத்தோக் கைதீரா அபு ஜஹார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாநிலத்திற்கு முதலீட்டாளர்களைத் தொடர்ந்து ஈர்ப்பதின் அவசியத்தை அபு ரவூப் யூசோ வலியுறுத்தினார்.

குறிப்பாக சுற்றுலா துறையில், மலாக்கா இந்த செப்டம்பரில் உலகச் சுற்றுலா நாள் அதோடு உலகச் சுற்றுலா மாநாடு 2025 ஐ நடத்துவதால் மீண்டும் உலகளவில் கவனத்தை ஈர்க்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனால் MCORP முதலீட்டு ஊக்க முயற்சிகளை மேம்படுத்துவதில் நம்பிக்கையோடு புதிய செயல்பாட்டுடன் இருக்க வேண்டும்.

இதனால் மாநிலத்திற்கு மேலும் முதலீட்டாளர்களை ஈர்க்க உகந்த சூழலை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.

மேலும், கடந்த நவம்பர் மாதம் வரை, MCORP இன் எட்டு துணை நிறுவனங்கள் 7.7 மில்லியன் ரிங்கிட் லாபத்தைப் பெற்றுள்ளன.

இது 2023 ஆம் ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடுகையில் 4.3 மில்லியன் ரிங்கிட் அதிகரிப்பைக் குறிக்கிறது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset