நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை: ஹசன் கரிம்

கோலாலம்பூர்:

நஜீப் விவகாரத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை.

கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் கரிம் இதனை கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டிலேயே அனுபவிப்பதற்கான கூடுதல் ஆணையை நீதித்துறை மறுஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ராஜினாமா செய்ய வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது.

அதே வேளையில் நீதித்துறையின் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான அர்ப்பணிப்பிற்காக அன்வார் பாராட்டப்பட வேண்டும்.

அன்வார் இப்ராகிம் தனிப்பட்ட முறையிலும், பிரதமர் என்ற வகையிலும் தன்னிச்சையாக பதில் அளிக்க முடியாது.

இந்த வழக்கில், அரசாங்கமும் குறிப்பாக பிரதமரும் நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிபதிகளின் முடிவுகளில் தலையிட முடியாது.

மேலும்  நாடாளுமன்றத்தில் இது குறித்து திரும்பத் திரும்ப பதிலளித்து விளக்கிய பிரதமரை நாம் பாராட்ட வேண்டும் என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset