நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய, சிங்கப்பூர்க் கொடிகளின் நிறங்களில் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் ஜொலித்தன

புத்ரா ஜெயா:

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் சந்தித்தார்.

இருதரப்பும் ஒத்துழைக்கக்கூடிய பல அம்சங்கள் குறித்து சிறப்பாகக் கலந்துரையாடியதாய்ச் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) கூறியுள்ளார்.

பிரதமர் லாரன்ஸ் வோங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று புத்ரா ஜெயாவுக்கு வருகை தந்தார். 

சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்களின் வருடாந்திரச் சந்திப்பின் தொடக்கமாகத் பிரதமர் அன்வார் நேற்றிரவு (6 ஜனவரி) வோங்கிற்கு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அன்வாருடனான கலந்துரையாடல்கள் இருதரப்பு உறவுக்குச் சாதகமான பாதையை அமைக்கும் என்று வோங் நம்பிக்கை தெரிவித்தார்.

இருநாடுகளும் அவற்றின் 60 ஆண்டு இருதரப்பு உறவை இந்த வருடம் கொண்டாடுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
 
மலேசிய, சிங்கப்பூர்க் கொடிகளின் நிறங்களில் Petronas இரட்டைக் கோபுரங்கள் ஒளியூட்டப்பட்டதாகத் வோங் அவரின் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset