செய்திகள் மலேசியா
நஜிப் ஆதரவு கூட்ட விவகாரத்தில் ஜசெகவின் எதிர்ப்பினால் அம்னோ அடிபணிந்தது: துன் மகாதீர்
கோலாலம்பூர்:
நஜிப் ஆதரவு கூட்ட விவகாரத்தில் ஜசெகவின் எதிர்ப்புக்கு அம்னோ அடிபணிந்து விட்டது.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது இதனை கூறினார்.
புத்ராஜெயாவில் நடைபெற்ற நஜிப் ஆதரவு கூட்டத்தில் அம்னோ ஏன் பின்வாங்கியது என்பது பலருக்குப் புரியவில்லை.
மாட்சிமை தங்கிய மாமன்னரின் அறிக்கை திட்டமிட்ட பேரணியை தடை செய்யவில்லை.
மன்னிப்பு எவ்வாறு வழங்கப்பட முடியும் என்பதை மட்டுமே அவரது மாட்சிமையின் அறிக்கை விளக்குகிறது.
அதனால் இந்த கூட்டத்தை அம்னோவால் தொடர்ந்திருக்கலாம்.
ஆனால் பாஸ் கட்சியுடனான அம்னோவின் ஒத்துழைப்பிற்கு ஜசெகவின் எதிர்ப்பு என்பது தெளிவாக உள்ளது.
இது தொடர்ந்தால் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்திலிருந்து அம்னோ அகற்றப்படலாம்.
இந்த விவகாரத்தில் ஜசெக லிம் குவான் எங் இன்னும் விஷமாகவே பேசி வருகிறார்.
ஆட்சியில் இருந்து அம்னோ அகற்றப்பட்டால் அரசாங்கம் வீழ்ச்சியடையாது.
ஆனால் அம்னோ ஆட்சியில் இல்லாதபோது அம்னோ தலைவர்களின் தலைவிதி பாதிக்கப்படலாம்.
இதுதான் அம்னோவின் தலைவிதி. அம்னோ தலைவர்களின் பாதுகாப்பு அரசாங்கத்தில் அவர்கள் பங்கேற்பதைப் பொறுத்தது.
அதனால் ஜசெக ஆதரவு தேவை என்று துன் மகாதீர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 7, 2025, 5:23 pm
கத்தியால் உறவுக்கார பெண்ணைத் தாக்கிய 14 வயது சிறுமிக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
January 7, 2025, 5:06 pm
நெகிரி செம்பிலான் அரசு ஊழியர்களுக்கு 200 ரிங்கிட் சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்: அமினுடின் ஹருன்
January 7, 2025, 4:45 pm
ஆஸ்கர் விருது பட்டியலில் நுழைந்தது நடிகர் சூர்யாவின் கங்குவா, பிருத்விராஜின் ஆடுஜிவிதம்
January 7, 2025, 4:31 pm
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா
January 7, 2025, 4:27 pm
சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் சீருடையில் கேமரா பொருத்தப்படும்: அந்தோனி லோக்
January 7, 2025, 1:07 pm