நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ம.இ.காவின் அரசியல் நடவடிக்கைக்குப் பத்துமலை திருத்தலம் இடமல்ல:  ஜொகூர் மாநில ஜசெகவின் துணை நிர்வாக செயலாளர் கார்த்தியாயினி அறிக்கை 

ஜொகூர் பாரு: 

மலேசியாவில் இந்துக்களின் புனித தலமாக விளங்கும் பத்துமலையில் ம.இகா எனும் அரசியல் கட்சி முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்குச் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். 

பத்துமலை அதன் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அக்கட்சி அரங்கேற்றியுள்ளது வேதனையாகும் என்று ஜொகூர் மாநில ஜசெகவின் நிர்வாக செயலாளர் கார்த்தியாயினி ஜெயபாலன் கூறினார் 

மலேசிய இந்தியர் சமூகம் அரசியல் லாபத்திற்காக அடகு வைக்கப்பட்ட ஒரு சமூகமாக மாறிவிட்டது. இந்திய சமூகம் கல்வி, பொருளாதாரம் சமூகம் ஆகிய விவகாரங்களில் பல்வேறு சவால்களைக் கடந்து வரும் வேளையில் ம.இ.கா அரசியல் நோக்கத்திற்காக மட்டும் செயல்படுவது வெட்கக்கேடானது என்று அவர் சொன்னார். 

நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒரு முன்னாள் பிரதமருக்காக ம.இ.கா சிறப்பு பிரார்த்தனையைப் பத்துமலையில் நடத்துகிறது 

பத்துமலை என்பது இந்து சமயத்தின் புனிததலமாகும். அதனை அரசியல் நோக்கத்திற்காக ம.இ.கா பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கார்த்தியாயினி சொன்னார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset