நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கத்தியால் உறவுக்கார பெண்ணைத் தாக்கிய 14 வயது சிறுமிக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு 

ஜார்ஜ்டவுன்: 

கத்தியால் தனது சொந்த உறவுக்கார பெண்ணைத் தாக்கிய 14 வயது சிறுமிக்கு எதிராக இங்குள்ள புக்கிட் மெர்தாஜாம் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது 

இருப்பினும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அந்த சிறுமி மறுத்து விசாரணை கோரினார். மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி முஹம்மத் ஹரித் முஹம்மத் மஸ்லான் முன்னிலையில் இந்த குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது 

குற்றச்சாட்டு அடிப்படையில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி காலை 11.30 மணியளவில் பிறையில் உள்ள இல்லம் ஒன்றில் தனது உறவுக்கார பெண்ணுக்கு வேண்டுமென்றே காயத்தை விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது 

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 324 இன் கீழ் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த சட்டமானது 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதமும் விதிக்கிறது 

சம்பந்தப்பட்ட சிறுமி 3 ஆயிரம் ரிங்கிட் ஜாமின் தொகையில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு மாஜிஸ்டிரேட் நீதிபதி அனுமதி வழங்கினார். 

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 20ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset