நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் பேரரசரின் கூடுதல் உத்தரவு விவாகரத்தில் உள்துறை அமைச்சகம் சட்டத்திட்டங்களைப் பின்பற்றியது: ஃபஹ்மி ஃபாட்சில் 

கோலாலம்பூர்: 

16-ஆவது பேரரசர் பிறப்பித்ததாகக் கருதப்படும் கூடுதல் உத்தரவை உள்துறை அமைச்சகம் பொருட்படுத்தவில்லை என்று வெளிவந்த குற்றச்சாட்டைத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் மறுத்துள்ளார்.

டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் உள்துறை அமைச்சகம் நடைமுறைப்படி மட்டுமே செயல்பட்டதாக ஃபஹ்மி கூறினார்.

எந்த ஆவணங்கள் பெறப்பட்டாலும், அவை சட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின் 42-ஆவது பிரிவின் அடிப்படையில் மன்னிப்பு வாரியத்தின் நடவடிக்கைகளில் இருந்து உத்தரவு தொடர்பான எந்தவொரு விஷயமும் வருகிறது. 

எனவே விரிவான விஷயங்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

அதை நாங்கள் செயல்முறைக்கு விடுகிறோம் என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். 

நேற்று, வழக்கறிஞர் டான்ஸ்ரீ முஹம்மத் ஷாஃபி அப்துல்லா, நஜிப் எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் கூடுதல் ஆணையின் இருப்பை உறுதிப்படுத்தும் பகாங் சுல்தான் மன்றத்தின் கடிதத்தை வெளிப்படுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset