நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொது பல்கலைக்கழகங்கள், போலிடெக்னிக், கல்லூரி மாணவர்களுக்கு Flysiswa திட்டத்தின் கீழ் வீமான டிக்கெட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: அந்தோனி லோக் 

கோலாலம்பூர்:

சபா, சரவாக் மற்றும் மற்ற மாநிலங்களில் பயிலும் பொது பல்கலைக்கழகங்கள், போலிடெக்னிக், கல்லூரி மாணவர்களுக்கு Flysiswa திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் விமான டிக்கெட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார். 

உள்நாட்டு விமானச் சேவைகளுக்கான டிக்கெட் விலைக்கு அரசாங்கம் 400 ரிங்கிட் உதவித் தொகை வழங்கியது. 

பொது பல்கலைக்கழகங்கள், போலிடெக்னிக், கல்லூரி, மெட்ரிகுலேஷன் மாணவர்கள் இந்தச் சலுகையை அனுப்பவிக்கலாம்.

இவ்வாண்டு ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30-ஆம் தேதி வரை மாணவர்கள் இந்த விமான டிக்கெட்டுகளுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களின் தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான மாணவர்கள் போக்குவரத்து அமைச்சகத்தின் இணையதளம் https://subsidiudara.mot.gov.my மூலம் தகுதிச் சரிபார்ப்பை மேற்கொள்ளலாம். 

ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், மாணவர்கள் மீண்டும் மறு விண்ணப்பம் செய்யலாம். 

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset