நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலிவு விலை வீடமைப்பு நிலத்தில் சுங்கை பினாங் எல்ஆர்டி இலகு ரயில் நிலையம் கட்டப்படுகிறதா? சாவ் கோன் இயோ மறுப்பு

ஜார்ஜ் டவுன்: 

மலிவு விலை வீடமைப்பு நிலத்தில் சுங்கை பினாங் எல்ஆர்டி இலகு ரயில் நிலையம் கட்டப்படுவதாக வெளிவந்த தகவலைப் பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கோவ் மறுத்துள்ளார். 

இதற்கு முன், இந்தக் காலி நிலத்தில் பள்ளிக்கூடம் அமைக்கும் திட்டம் இருந்தது. 

ஆனால் இப்பகுதி எல்ஆர்டி இலகு ரயில் நிலையம் அமைப்பதற்கு ஏற்றதாக இருந்தது. 

அதனால் இது குறித்து கல்வி துறையுடன் முன்பே விவாதித்ததாக சாவ் கோன் இயோ விளக்கமளித்தார்.

இந்த நிலம் எல்ஆர்டி இலகு ரயில் நிலையம் கட்டுவதற்கு மட்டுமே  போதுமானது என்றும் பள்ளிக்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

பினாங்கு மாநில கெராக்கான் கட்சி கூறியது போல் இந்த நிலம் மலிவு விலை வீடமைப்பு திட்டத்திற்கானது அல்ல என்று சாவ் திட்டவட்டமாகக் கூறினார். 

மத்திய அரசின் எல்ஆர்டி கொள்முதல் கூட்டத்தில், எம்ஆர்டி கார்ப்பரேஷன் திட்டம் மற்றும் திட்டத்திற்கான ஒப்பந்த விவரங்கள் குறித்து விளக்கமளித்ததாகவும் சோவ் கூறினார்.

ஒப்பந்த விவரங்கள் குறித்த கூடுதல் அறிவிப்புகளை அமைச்சரிடம் விட்டுவிடுகிறேன் என்றார் அவர். 

சுங்கை பினாங் எல்ஆர்டி இலகு ரயில் நிலையம் கட்டுவதற்கு 
வருகின்ற சனிக்கிழமை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அடிக்கல் நாட்டுவார் என்றும் சாவ் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset