நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் சீருடையில் கேமரா பொருத்தப்படும்: அந்தோனி லோக் 

கோலாலம்பூர்:

சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் சீருடையில் கேமரா பொருத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார். 

இவ்வாண்டு தொடங்கி அவர்களது சீருடையில் கேமராக்கள் பொருத்தப்படும்.

குறிப்பாக கனரக வாகனங்களை உள்ளடக்கிய அமலாக்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை அதிகரிக்கவும், சாலையைப் பயன்படுத்துபவர்களின் வாய்மொழி பிரச்சனைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பாதுகாக்கவும் சீருடைகளில் கேமராக்கள் பொருத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சாலைப் போக்குவரத்துத் துறை தலமை இயக்குனர் டத்தோ ஏடி பேட்லி ரம்லி கடந்த வாரம் நடைபெற்ற கலந்துரையாடலின்போது உடலில் ஆடைகளில் பொருத்தும் கேமராக்களை வாங்குவதற்கு உடனடி நிதியதவி வழங்குமாறு கோரியிருந்தார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset