நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

 HSR உள்ளிட்ட பெரியத் திட்டங்களை அரசு ஒத்திவைத்துள்ளது: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா: 

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் (HSR) திட்டத்தை புதுப்பிக்கும்  நடவடிக்கையை அரசாங்கம் தற்போது ஒத்திவைப்பதாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

அரசாங்கத்தின் மீது சுமையில்லாமல் தனியார் துறையின் முழு முதலீட்டைப் பொறுத்தே இந்தத் திட்டம் தொடரும் அன்வார் கூறினார்.

அரசாங்கம் தற்போது நிதிசுமையை எதிர்க்கொள்வதால் வெள்ளம் தணிப்பு மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகள் போன்ற மக்களை உள்ளடக்கிய திட்டங்களில் இப்போது கவனம் செலுத்துவதே இதற்குக் காரணம் என்று பிரதமர் கூறினார்.

எனவே, சில நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது அவசியம் ன்பதால் அரசாங்கத்தின் பெரிய  திட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக  அவர் கூறினார்.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்வுடனான செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset