நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் அரசு ஊழியர்களுக்கு 200 ரிங்கிட் சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்: அமினுடின் ஹருன்

சிரம்பான்: 

நெகிரி செம்பிலான் அரசு ஊழியர்களுக்கு 200 ரிங்கிட் சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்  என்று அம்மாநில மந்திரி பெசார்  டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்தார்.

மாநிலத்திலுள்ள  48,000க்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் இந்த 200 ரிங்கிட் சிறப்பு நிதி உதவியைப் பெறவுள்ளனர். 

இதற்காக மாநில அரசு 10 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. 

இந்தச் சிறப்பு உதவித் தொகை மார்ச் அல்லது நோன்பு பெருநாள் கொண்டாட்டத்திற்கு முன் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset