நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா

கோலாலம்பூர்: 

இன்று காலை நேபாளத்தின் லோபுச்சேவில் இருந்து சுமார் 84 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம், விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது. 

நேபாளத்தில் உள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கவும் விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது. 

நேபாளத்திலுள்ள மலேசியர்களை E-கான்சுலர் தளம் மூலம் பதிவு செய்து, சமீபத்திய தகவல் மற்றும் உதவிக்கு மலேசிய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் விஸ்மா புத்ரா தெரிவித்தது. 

தூதரக உதவிக்கு, மலேசியர்கள் காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்தைத் தொடர்புக் கொள்ளலாம். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset