நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னரின் கூடுதல் உத்தரவு  வதந்தி அல்ல என்பதை நிரூப்பித்துள்ளது: அக்மால்

புத்ராஜெயா -

மாமன்னரின் கூடுதல் உத்தரவு வதந்தி அல்ல என்பதை நிரூப்பித்துள்ளது என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மத் அக்மால் சலே இதனை கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தனது ஆறாண்டு சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் கூடுதல் உத்தரவை சவால் செய்ய அனுமதித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமான அறிகுறியாகும்.

மேலும் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, அதன் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் உட்பட நஜிப்பின் விண்ணப்பத்தை ஆதரித்து தாக்கல் செய்யப்பட்ட நான்கு பிரமாணப் பத்திரங்களும்  வதந்திகள் என்று உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அமர்ஜித் சிங் கருத்து  இந்த முடிவை எடுத்தார். 

ஆனால் தற்போது வதந்தி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset