நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பிற்கு முழு மன்னிப்பு வழங்க வேண்டும் என மாமன்னரிடம் கருணையுடன் கோருகிறேன்: ஜாஹித்

கோலாலம்பூர்:

நஜிப்பிற்கு முழு மன்னிப்பு வழங்க வேண்டும் என மாமன்னரிடம் கருணையுடன் கோருகிறேன்.

அம்னோ தலைவரும் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தில் இருந்து 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இக்குற்றச்சாட்டுகளில் இருந்து மாமன்னர் அவருக்கு முழு மன்னிப்பு வழங்க வேண்டும்.

கடந்த 2024 ஜனவரி 29ஆம் தேதியிட்ட நஜிப்பின் கூடுதக் உத்தரவு ஏற்கெனவே உள்ளதாகவும் செல்லுபடியாகும் என்றும் உறுதிப்படுத்திய பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லாவிற்கு எனது நன்றிகள்.

பகாங் அரண்மனையின் இக் கடிதம் நானும், பகாங் முதல்வர் வான் ரோஸ்டி வான் இஸ்மாயிலும்   நஜிப்பின் மனுவை ஆதரித்து அளித்த கூடுதல் பிரமாணப் பத்திரத்திரத்தின் உண்மையை நிரூபிக்கிறது. 

இதனைத் தொடர்ந்து நடந்து வரும் சட்ட நடைமுறைகளை அம்னோ மதிக்கிறது.

மேலும் நஜிப்பிற்கான நீதிக்காக தொடர்ந்து போராடும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset