நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்புக்கு உடல் நிலை சரியில்லாததால் 1எம்டிபி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது: ஷாபி

புத்ராஜெயா:

நஜிப்புக்கு உடல்நிலை சரியில்லாததால் 1எம்டிபி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது என்று அவரின் வழக்கறிஞர் டான்ஶ்ரீ முஹம்மத் ஷாபி அப்துல்லாஹ் கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் கடந்த மூன்று அல்லது நான்கு நாட்களாக தூங்கவில்லை என்று கூறப்பட்டதையடுத்து அவர் மீதான வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் அமர்ந்திருந்த நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுவேராவிடம் இவ்விவகாரத்தை தெரிவித்தார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவால் இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்ட ஒரு கூடுதல் உத்தரவுக்கான மேல்முறையீட்டு வழக்கில் அவர் ஈடுபட்டதால் நஜிப் தூங்கவில்லை.

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் 2.27 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 1எம்டிபி நிதியை பணமோசடி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை மாலை வரை தொடர வேண்டும்.

நஜிப்பை ஓய்வெடுக்க அனுமதிக்க இந்த விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று  செக்வேராவிடம்  கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset