நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூடுதல் உத்தரவை மறைத்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும்: ஹம்சா சைனுடின் காட்டம் 

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு வீட்டுக்காவலில் எஞ்சிய தண்டனை காலத்தைக் கழிக்க வகை செய்யும் மாமன்னரின் கூடுதல் உத்தரவை அரசாங்கம் மறைத்தது அரசவைக்கும் நாட்டு மக்களுக்கும் செய்தி மிகப்பெரிய துரோகமாகும் 

இதனால் இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விலக வேண்டும் என்று எதிர்கட்சி நாடாளுமன்ற தலைவர் ஹம்சா கூறினார் 

பிரதமரின் செயல் என்பது நாட்டிற்கும் பேரரசருக்கும் செய்த துரோகமாகும். மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது யாரோ சிலர் இந்த கூடுதல் உத்தரவாதத்தை மறைக்க செய்த முயற்சியைத் தோல்விக்கு உள்ளாக்கியது 

முன்னதாக, கூடுதல் உத்தரவு தொடர்பான மேல்முறையீட்டு நீதிமன்றம் டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு இணக்கம் தெரிவித்தது. இதனால் மீண்டும் இந்த கூடுதல் உத்தரவு வழக்கு விசாரணை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் செவி சாய்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset