நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டுக் காவலில் வைப்பது குறித்து சிறைத் துறைக்கு எந்த உத்தரவும் கிடைக்கவில்லை: சைஃபுடின் நசுத்தியோன் 

புத்ரா ஜெயா:

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று அதன் அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

கடந்தாண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவிலிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு குறிப்பாக சிறைத்துறைக்கு கிடைத்த கடிதத்தில் வீட்டுக் காவல் குறித்துக் குறிப்பிடப்படவில்லை" என்று அவர் கூறினார்.

JPM இன் சட்ட விவகாரப் பிரிவு பொது மன்னிப்பு வாரியத்தின் செயலகமாகும்.

அந்தக் கடிதத்தில் மன்னிப்பு வாரியக் கூட்டத்தின் அறிக்கை, மன்னிப்புக் குழுவின் முடிவைச் செயல்படுத்த சிறைத் துறைக்கு வழங்கப்பட்ட உத்தரவு ஆகிய இரண்டு விஷயங்கள் இருந்தன.

இந்த உத்தரவில் மன்னிப்பு வாரியத்தின் தலைவர் பேரரசர் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஆகியோர் சாட்சியாக கையெழுத்திட்டனர்.

சிறை தண்டனைக் காலத்தைக் குறைத்து அபராதத் தொகையைக் குறைக்க வேண்டும் என்பதே தீர்ப்பின் உத்தரவு. 

இது சிறைத் துறைக்கு கிடைத்த கடிதம், அதாவது வீட்டுக் காவலில் குறிப்பிடப்படவில்லை என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset