செய்திகள் மலேசியா
பிரார்த்தனை கூட்டத்தை ஆலயத்தில் நடத்தாமல் வேறு எங்கு நடத்துவது?: டத்தோஸ்ரீ சரவணன்
பத்துமலை:
பிரார்த்தனை கூட்டத்தை ஆலயத்தில் நடத்தாமல் வேறு எங்கு நடத்துவது என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கேள்வி எழுப்பினார்.
வீட்டுக் காவல் விவகாரத்தில் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என இன்று புத்ராஜெயாவில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அக்கூட்டத்தை நடத்த போலிஸ் அனுமதி வழங்கவில்லை.
இருந்தாலும் முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது என்ற நோக்கில் மஇகா பத்துமலையில் பிரார்த்தனை கூட்டத்தை நடத்தியது.
பிரார்த்தனை என்பது ஆலயத்தில் தான் நடத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
ஆனால் இதையும் அரசியலாக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு ஒரு துணையமைச்சர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதெல்லாம் தேவையில்லாத சர்ச்சையாகும்.
நஜிப் குற்றம் செய்தாரா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். அதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளது.
ஆனால் அவருக்கு மாமன்னர் உண்மையிலேயே வீட்டுக் காவலை வழங்கினாரா என்பது தான் அனைவரின் கேள்வியாக இருந்தது.
அக் கேள்விக்கும் தற்போது பகாங் அரண்மனை தொளிவான விளக்கத்தை தந்து விட்டது.
மேலும் நஜிப் தனது வழக்கை தொடர நீதிமன்றமும் அனுமதி தந்து விட்டது. இதையும் ஒரு சில தலைவர்கள் பொய் என்பார்கள்.
அதையெல்லாம் நாம் கருத்தில் எடுத்து கொள்ளாமல் உண்மைக்காக போராடுவோம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 7, 2025, 5:23 pm
கத்தியால் உறவுக்கார பெண்ணைத் தாக்கிய 14 வயது சிறுமிக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
January 7, 2025, 5:06 pm
நெகிரி செம்பிலான் அரசு ஊழியர்களுக்கு 200 ரிங்கிட் சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்: அமினுடின் ஹருன்
January 7, 2025, 4:45 pm
ஆஸ்கர் விருது பட்டியலில் நுழைந்தது நடிகர் சூர்யாவின் கங்குவா, பிருத்விராஜின் ஆடுஜிவிதம்
January 7, 2025, 4:31 pm
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா
January 7, 2025, 4:27 pm
சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் சீருடையில் கேமரா பொருத்தப்படும்: அந்தோனி லோக்
January 7, 2025, 1:07 pm