நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ நஜிப்புக்கு ஆதரவாக பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில்  3,000 பேர் கலந்து கொண்டனர் 

பத்துமலை:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவாக இன்று பத்துமலை முருகன் திருத்தலத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் 3,000க்கும் மேற்பட்ட மஇகாவினர் கலந்து கொண்டனர்.

மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனையில் மஇகாவின் உயர் மட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் அமைதியான முறையில் அணிவகுத்து சென்ற மஇகாவினர் விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரார்த்தனைக்கு பின்னர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் மண்டபத்தில் மூவாயிரம் பேர் முன்னிலையில் டத்தோஸ்ரீ சரவணன் உரையாற்றினார்.

இது அரசியல் கூட்டம் அல்ல.  டத்தோஸ்ரீ நஜிப்புக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பிரார்த்தனை மட்டுமே என்று அவர் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset