நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஶ்ரீ அன்வாருக்கு எதிரான துன் மகாதீரின் மானநஷ்ட வழக்கு ஆகஸ்ட் மாதத்தில் விசாரிக்கப்படும் 

கோலாலம்பூர்: 

டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக துன் டாக்டர் மகாதீர் முஹம்மத் தொடுத்த மானநஷ்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 13 முதல் 21 வரை நடைபெறவுள்ளது 

இந்த வழக்கு விசாரணை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது 

நீதித்துறை ஆணையர் ஸஹாரா ஹுசைன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டது

வழக்கறிஞர் நிஸாம் பஷிர் மகாதீருக்காக வாதாடும் வேளையில் அலிஃப் பெஞ்சமின் சுஹைமி அன்வார் இப்ராஹிமிற்காக வாதாடுகிறார் 

முன்னதாக, கடந்த 2023 ஆண்டு மார்ச் 18ஆம் தேதி பிகேஆர் காங்கிரஸ் கூட்டத்தை தம்மை கடுமையாக சாடிய அன்வார் இப்ராஹிம் மீது வழக்கு தொடுப்பதாக துன் மகாதீர் அறிவித்திருந்தார் குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset