நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் முன்னாள் பேரரசரின் கூடுதல் உத்தரவை நிரூபிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் நஜிப்பிற்கு அனுமதி

புத்ரா ஜெயா:

நஜிப் ரசாக் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் முன்னாள் பேரரசரின் கூடுதல் உத்தரவு இருப்பதை நிரூபிக்க நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி பெற்றுள்ளார். 

மூன்று பேர் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குழு உயர் நீதிமன்றத்தில் வழக்கின் தகுதியை விசாரிக்கும் போது புதிய ஆதாரங்களைச் சேர்க்க முன்னாள் பிரதமரின் விண்ணப்பத்தையும் அனுமதித்தது.

புதிய ஆதாரங்களை அறிமுகப்படுத்த லாட் & மார்ஷலில் உள்ள நிபந்தனைகளை நஜிப் பூர்த்தி செய்துள்ளார் என்று நீதிபதி ஃபிரூஸ் ஜாஃப்ரில் கூறினார்.

கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, 16-ஆவது பேரரசராக இருந்த பகாங் ஆட்சியாளரிடம் இருந்து நஜிப் கூடுதல் உத்தரவைப் பெற்றதாக ஃபிரூஸ் கூறினார்.

அரசாங்கம் உறுதியான மறுப்பு ஆதாரங்களை வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

நீதிபதி அசஹஹரி கமால் ரம்லி ஃபிரூஸின் கருத்தை ஏற்றுக்கொண்டார்.

இருப்பினும், மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி அசிசா நவாவி இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset