நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கனரக வாகனப் பாதுகாப்பை மேற்பார்வையிட சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும்: அந்தோனி லோக் 

புத்ரா ஜெயா: 

கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை விரிவாகக் கையாள்வதற்காக, தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புப் பணிக்குழுவை போக்குவரத்து அமைச்சகம் அமைக்கும் அதன் அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார். 

போக்குவரத்து அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ ஜனசந்திரன் முனியன் தலைமையிலான குழு, சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பிற்கான பயனுள்ள அணுகுமுறையை வகுத்து செயல்படுத்த பல்வேறு தரப்பினர்களை இணைக்கும் என்று அந்தோனி லோக் கூறினார்.

இந்தச் சிறப்புப் பணிக்குழுவைச் செயல்படுத்துவதற்காக தலைமைச் செயலாளருக்கு முழு ஆணையை வழங்குவதாக அந்தோனி லோக் குறிப்பிட்டார். 

சிறப்புப் பணிக்குழுவின் பணி குறித்து தலைமைச் செயலாளர் தன்னிடம் நேரடியாகப் புகாரளிப்பார் என்றும் அது சீராக இயங்குவதைப் போக்குவரத்து அமைச்சகம் உறுதிப்படுத்த விரும்புகிறதாகவும் அவர் தெரிவித்தார். 

எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யாமல் உடனடியாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகளைச் செயல்படுத்த அவர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

2025ஆம் ஆண்டுக்கான புதிய ஆண்டு ஆணை வழங்கும் விழாவின் பின்னர் இன்று செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset