நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட கூடுதல் உத்தரவு உண்மையே: பகாங் அரண்மனை விளக்கம் 

குவாந்தான்: 

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் தனது எஞ்சிய தண்டனை காலத்தை வீட்டுக்காவலில் கழிக்க செய்யும் கூடுதல் உத்தரவினை 16ஆவது மாமன்னராக இருந்த அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் இணக்கம் வழங்கியிருந்தார். 

இந்த உத்தரவை கடந்த ஜனவரி 29ஆம் தேதி 2024ஆம் ஆண்டு பிறப்பித்தார். 

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கான கூடுதல் உத்தரவு என்பது உண்மையானது என்று பகாங் மாநில சுல்தானின் PENGELOLA BIJAYA DIRAJA டத்தோ ஹஜி அஹ்மத் கிர்ரிஸால் கூறினார். 

முன்னதாக, MAJLIS KESULTANAN PAHANG எனும் பெயரில் இந்த ஊடக அறிக்கை சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset