நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் மலைப்பாம்பைப் பிடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி

ஜொகூர் பாரு:

ஜொகூரில் மலைப்பாம்பைப் பிடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியின் செயலைக் காட்டும் காணொலி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

வீட்டிற்கு மலைப்பாம்பு நுழைந்து விட்டதாக தீயணைப்பாளர்கள், மீட்புக் குழுவிடம் தகவல் அனுப்பியுள்ளனர். 

இருப்பினும், அரை மணி நேரம் ஆகியும் யாரும் வரவில்லை. 

வேலைக்குச் செல்லவும் நேரமாகிவிட்டதால் தாங்களாகவே மலைப்பாம்பை வீட்டிலிருந்து அகற்ற அவர்கள் முடிவெடுத்தனர்.

அவர்கள் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்குப் பாம்பை எடுத்துக் கொண்டு  மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். 

மனைவி வால் பகுதியைப் பிடித்துக்கொண்டு கணவருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் அமர்கிறார்.

கணவர் ஒரு கையில் பாம்பைப் பிடித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறார்.

இந்தக் காணொலியைக் கண்ட இணையவாசிகள் வியந்துள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset